‘சசிகலா உணவருந்தினார்; எழுந்து நடந்தார்’ – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

 

‘சசிகலா உணவருந்தினார்; எழுந்து நடந்தார்’ – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் உடல்நிலை நலமாக இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவு அருந்தினார்.எழுந்து நடந்தார். மூன்று நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சசிகலா இருப்பார். கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஐசியூ நோயாளி அல்ல. விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்த பிறகே உடல்நிலை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

‘சசிகலா உணவருந்தினார்; எழுந்து நடந்தார்’ – மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

ஜன.27ம் தேதி விடுதலையாகவிருந்த சசிகலாவுக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வழக்கறிஞர் ராஜராஜன் கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். கேரளா அல்லது புதுச்சேரி மாநிலத்துக்கு மாற்றி அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திடீர் உடல்நலக்குறைவால் திட்டமிட்டப்படி ஜன.27ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவாரா? என்ற கேள்வி வெகுவாக எழுந்திருக்கும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.