மருத்துவமனைகளின் படுக்கை விபரங்கள் “StopCorona” என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்!

 

மருத்துவமனைகளின் படுக்கை விபரங்கள் “StopCorona” என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்!

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு மேல் பரவி வருகிறது. முன்னதாக ஒரு நாளைக்கு 400 முதல் 600 வரையிலேயே இருந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது இரு மடங்காக பரவி வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,562 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சென்னை மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறைவாக இருப்பதாகவும் நோயாளிகள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல்கள் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

மருத்துவமனைகளின் படுக்கை விபரங்கள் “StopCorona” என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்!

படுக்கைகளை அதிகரிப்பது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டதில், படுக்கை விபரங்களை இணைய தளத்தில் வெளியிட மருத்துவமனை நிர்வாகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அதனால் இனிமேல் மருத்துவமனைகளின் படுக்கை வசதிகளையும் படுக்கைகளின் எண்ணிக்கையும் உள்நோயாளிகளின் எண்ணிக்கையும் StopCorona என்ற இணையத்தில் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.