darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



7 வயது சிறுமியை கீழே தள்ளிய கொடூர பூனை! ஒரு பூனை பாக்குற வேலையா இது?!

மத்திய ரஷ்யா
மத்திய ரஷ்யா

வடக்கு மத்திய ரஷ்யாவில் நோவி யுரெங்கோய் நகரில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த ஏழு வயது சிறுமி தனியாக இருந்திருக்கிறார்.அப்போது அவர் செல்லமாக வளர்க்கும் பூனை குட்டியை அதற்குரிய பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டு ,அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் குட்டியா ஒரு வாக்கிங் போகலாம் என்று காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

russia

ரஷ்யாவில் தற்போது கடுமையான குளிர் காலம்.ஊரு முழுக்க பனி கொட்டி குவியல் குவியலாக காட்சியளிக்கும்.வெளியில் போகும் குளிருக்கு தாக்குப்பிடிக்க வேண்டி குளிர் காலத்துக்கான கம்பிளி உடை போட்டுகொண்டு,அவ்வப்போது தனது அம்மா வருகிறாரா என்று பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தபடி இருந்திருக்கிறார்.எப்படா வெளியில் போவோம் என்று செல்ல பூனைக் குட்டியும் சிறுமியிடமிருந்து குதித்து வெளியில் போக முரண்டு பிடித்துக்கொண்டே இருந்திருக்கிறது!

அப்படி ஒரு முறை குழந்தை கீழே எட்டிப் பார்க்கும் போது பூனை பைக்குள்ளிருந்து வெளியேற முயற்சித்த போது குழந்தையின் முதுகு முன்னோக்கி வளைந்ததில் பால்கனியிலிருந்து 100 அடி ஆழமுள்ள தரையில் போய் ‘பொத்தென்று’ விழுந்திருக்கிறார்.அந்தப் பகுதியில் இருந்த குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியோடு சம்பவ இடத்திற்கு வந்து,உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆஸ்ப்பத்திரிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

russia

சிறுமி விழுந்த இடம் பனி குவியல் இருந்த இடம் என்பதாலும்,போட்டிருந்த உடை ‘பொசு பொசு’வென்ற மென்மையான கம்பிளி என்பதாலும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்திருக்கிறார்!

2018 TopTamilNews. All rights reserved.