• July
    23
    Tuesday

Main Area

Main



புதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது

honor
honor
Loading...

டெல்லி: புதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது.

ஹுவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தற்போது இந்தியாவில் 10 ஸ்மார்ட்போன் மாடல்களை விற்று வருகிறது. இந்நிலையில், புதிய ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது. சர்வதேச அளவில் ஹானர் வி20 என்ற ஸ்மார்ட்போன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஸ்மார்ட்போனை தான் பெயர் மாற்றி தற்போது ஹானர் வியூ 20-ஆக இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடுகிறது. முன்னதாக பாரீசில் நடைபெறும் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜன.22-ஆம் தேதி இந்த மாடல் ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் ஜன.29-ஆம் தேதி விற்பனைக்கு வெளியாகிறது.

ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பட்டியலில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸர், 8 ஜிபி ரேம், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 48 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, 25 எம்.பி செல்பி கேமரா, டுயல் சிம் உள்ளிட்டவை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விலை பட்டியல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜன.29-ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.