”ஹண்டர் கேமிங் லேப்டாப்” – அறிமுகப்படுத்த ஹானர் திட்டம்

”ஹண்டர் கேமிங் லேப்டாப்” – அறிமுகப்படுத்த ஹானர் திட்டம்

நீங்கள் கேமிங் பிரியரா? கேம் விளையாடுவதற்காக தனியாக லேப்டாப் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான். ஹானர் நிறுவனம் விரைவில் ஒரு கேமிங் லேப்டாப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

”ஹண்டர் கேமிங் லேப்டாப்” – அறிமுகப்படுத்த ஹானர் திட்டம்

சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் செல்போன்களை அறிமுகப்படுத்தி இந்தியாவில் கலக்கிய ஹானர் நிறுவனம், விரைவில் கேமிங் லேப்டாப் ஒன்றை முதன்முறையாக வரும் 16ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

”ஹண்டர் கேமிங் லேப்டாப்” – அறிமுகப்படுத்த ஹானர் திட்டம்

எனினும் இந்த லேப்டாப்பில் எத்தகைய சிறப்பம்சங்கள் உள்ளன? மற்றும் அதன் விலை என்ன என்பது குறித்து ஹானர் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஹண்டர் என்ற பெயரில் இந்த லேப்டாப் வெளிவரும் என்றும் இதன் கீபோர்டு பின்புறத்தில் ஒளிரும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

”ஹண்டர் கேமிங் லேப்டாப்” – அறிமுகப்படுத்த ஹானர் திட்டம்

இது ஒருபுறமிருக்க, ஜெர்மனியில் நடந்து வரும் ஐஎப்ஏ 2020 டெக் கண்காட்சியில் ஜிஎஸ் புரோ மற்றும் இஎஸ் ஆகிய 2 ஸ்மார்ட் வாட்சுகளை ஹானர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவை முறையே 21 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் 8 ஆயிரத்து 700 ஆகிய விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஜிஎஸ் புரோ ஸ்மார்ட் வாட்ச் வரும் அக்டோபர் முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.
எஸ். முத்துக்குமார்