• December
    06
    Friday

Main Area

Main



புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது

honor
honor

பெய்ஜிங்: ஹூவாய் ஹானர் பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் தொடர்பான விவரங்கள் கசிந்துள்ளது.

ஹுவாய் ஹானர் பிராண்டு விரைவில் தனது ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஹானர் 8ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போன் JAT-TL00 மற்றும் JAT-AL00 என்ற மாடல் நம்பர்களுடன் TENAA வலைதளத்தில் சான்று பெற்றுள்ளது. சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூ-டோன் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

ஹானர் 8ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. + 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்

- 3 ஜி.பி. ரேம்

- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

- 8 எம்.பி. செல்ஃபி கேமரா

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.