• July
    17
    Wednesday

Main Area

Main



டுயல் ரியர் கேமரா செட்டப் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

honor
honor
Loading...

டெல்லி: புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதன்முறையாக ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபிளிப்கார்ட் மற்றும் ஹைஹானர் ஸ்டோர்களில் ஜன.20-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.13,999 என்றும், 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மிட்நைட் பிளாக், சப்பையர் ப்ளூ, மற்றும் ஸ்கை ப்ளூ ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்கை ப்ளூ நிறம் கொண்ட மாடல் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, டுயல் ரியர் கேமரா (13 எம்.பி + 2 எம்.பி, எல்.இ.டி ஃபிளாஷ்) மற்றும் 24 எம்.பி செல்பி கேமரா, கிரின் 710 பிராசஸர், விரல்ரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி, 3400 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், வைஃபை, டுயல் சிம் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

2018 TopTamilNews. All rights reserved.