கொரோனோ அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிலேயே பரிசோதனை… ஈரோடு மாநகராட்சி சார்பில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு!

 

கொரோனோ அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிலேயே பரிசோதனை… ஈரோடு மாநகராட்சி சார்பில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு!

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுதேடி சென்று பரிசோதனை செய்ய மாநகராட்சி சார்பில் 10 ஆட்டோக்களில் லேப் டெக்னீசியன்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி உடையவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று களப்பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் அறிகுறி உடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை 200 மாநகராட்சி பணியாளர்கள், 1,200 தன்னார்வலர்கள் என 1,400 பேர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அறிகுறி உள்ளவர்களுக்கு வீடுகளிலேயே சென்று பரிசோதனை செய்ய 10 ஆட்டோக்களில் லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஈரோடு மாநகரில் தொற்று படிப்படியாக குறைந்து வருவதாகவும், தொற்றினை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உடையவர்களை கண்டறிந்து அவர்களது விவரங்கள் களப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கொரோனோ அறிகுறி உள்ளவர்களுக்கு வீட்டிலேயே பரிசோதனை… ஈரோடு மாநகராட்சி சார்பில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு!

பின்னர், அறிகுறி உடையவர்களுக்கு அன்றைய தினமே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவுகள் வரும் வரை, அவர்களை தனிமைப்படுத்துதாகவும், பரிசோதனை முடிவில் தொற்று கண்டறியப்பட்டால் அரசு மருத்துவமனைக்கோ, தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைப்பதாக கூறினார். மேலும், அவர்கள் விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்

அத்துடன், அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றும், மருத்துவமனை வெகுதூரம் இருப்பவர்கள், வெளியே வர முடியாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அவர்களது வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக மாநகராட்சியில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

ஒவ்வொரு ஆட்டோக்களிலும் ஒரு லேப் டெக்னீசியன்கள் இருப்பார்கள் என்றும், இதேபோல் 10 தூய்மை ஆய்வாளர்கள், இதற்கு பொறுப்பேற்று அறிகுறி உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்கள என்றும் தெரிவித்தார். இந்த முடிவு ஒருநாளில் வந்து விடும் என்றும், இவ்வாறு வீடுகளிலேயே பரிசோதனை செய்வதால் பொது மக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் மிச்சமாகும் என்றும் ஆணையர் கூறினார்.