“வீடுதேடி சென்று விசாரிக்கும் திட்டம் – 280 மனுக்களுக்கு தீர்வு” – எஸ்.பி. தங்கதுரை

 

“வீடுதேடி சென்று விசாரிக்கும் திட்டம் – 280 மனுக்களுக்கு தீர்வு” – எஸ்.பி. தங்கதுரை

ஈரோடு மாவட்டத்தில் வீடுதேடி சென்று புகார்களை விசாரிக்கும் திட்டத்தின் கீழ் 280 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

புது எஸ்.பி. பொறுப்பேற்றார் | erode district superintendent of police - |  nakkheeran

இதுகுறித்து பேசிய அவர், இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை 300 மனுக்கள் பெறப்பட்டு, அதில், 150 மனுக்களின் மீது
ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் நேரடியாக சென்று புகார்தாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகண்டதாக கூறினார். மேலும், 40-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு எஸ்.பி என்ற முறையில் தானும், கூடுதல் டிஎஸ்பி-யும் விசாரணை நடத்தி தீர்வு வழங்கியதாகவும், 280 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மீதமுள்ள புகார்கள் சிவில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாக இருப்பதால் உடனடி தீர்வு வழங்க முடியவில்லை என்றும், அதற்கு சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்த அவர், தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் போலீசார் புகார்தாரரின் இருப்பிடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

“வீடுதேடி சென்று விசாரிக்கும் திட்டம் – 280 மனுக்களுக்கு தீர்வு” – எஸ்.பி. தங்கதுரை