குறைந்த ரத்த அழுத்தம் சமாளிக்க ஈஸி வழிகள்!

 

குறைந்த ரத்த அழுத்தம் சமாளிக்க ஈஸி வழிகள்!

ரத்த அழுத்தம் அதிகரிப்பது எவ்வளவு ஆபத்தோ, அதே போல் ரத்த அழுத்தம் குறைவதும் ஆபத்துதான். நம்முடைய ரத்த அழுத்தம் 120/80 mm Hg என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது இதயம் சுருங்கும்போது ரத்தம் பீய்ச்சி அடிக்கப்படும். அப்போது அதிகபட்சமாக 120 எம்எம் எச்.ஜி-யும் இதயம் விரிவடையும்போது நுரையீரலில் இருந்தும், உடலின் மற்ற பகுதியில் இருந்தும் ரத்தம் இதயத்துக்கு வரும் அப்போது, ரத்த அழுத்தம் 80 எம்எம்எச்ஜி என்ற அளவில் இருக்கும் இருக்க வேண்டும். இந்த அளவுக்கு கீழே இறங்கும்போது அதை லோ பி.பி என்று சொல்கிறோம். அதாவது 90/60 mm Hg-ல் இருந்து 120/80 mm Hg என்ற அளவில் ரத்த அழுத்தம் பதிவானால் அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தம் (லோ பிபி) உள்ளது என்று அர்த்தம்.

குறைந்த ரத்த அழுத்தம் சமாளிக்க ஈஸி வழிகள்!

ரத்தம் சரியான அழுத்தத்தில் பீய்ச்சப்படவில்லை என்றால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல் போய்விடும். அது உடல் உறுப்புக்கள் செயலிழப்பு வரை பாதிப்பை ஏற்படுத்தலாம். ரத்த அழுத்தம் குறையும் போது மயக்கம், சோர்வு, குமட்டல், வாந்தி, உணர்வு இழத்தல், பார்வைத் திறன் மங்குதல் போன்றவை ஏற்படும்.

நோன்பு, உண்ணாவிரதம் போன்று நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையலாம். இரண்டு உணவு இடைவேளைக்கு இடையே நீண்ட நேரம் வித்தியாசம் இருப்பதை தவிர்க்க வேண்டும். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது போன்று செய்யாமல், உணவைப் பிரித்துச் சாப்பிட வேண்டும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

போதுமான அளவு தண்ணீர் அருந்தாததும் ரத்த அழுத்தம் குறைய காரணம் ஆகிவிடும். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள் உப்பு அளவை குறைக்க மருத்துவர் பரிந்துரைப்பார். அதே நேரத்தில் லோ பிபி உள்ளவர்கள் உணவில் உப்பைக் கொஞ்சம் தூக்கலாகவே சேர்த்துக்கொள்ளலாம். இது ரத்த அழுத்தம் அதிகரிக்க உதவும்.

உணவு சாப்பிட முடியாத சூழலில் கொஞ்சம் காபி அருந்தலாம். அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவும். காபியில் உள்ள காஃபின் என்ற ரசாயனம் தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். கோடையில் அதிக காபியும் வேண்டாம். அதிக காபி நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். இரண்டு, மூன்று கப என அளவோடு நிறுத்திக்கொள்வது நல்லது.