பாத வெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தவிர்க்க என்ன வழி?

 

பாத வெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தவிர்க்க என்ன வழி?

அதிகப்படியான சரும உலர்வு பிரச்னை காரணமாக பாத வெடிப்பு ஏற்படுகிறது. நம்முடைய முகம், கை சருமத்தைப் போலவே நம்முடைய பாத சருமத்துக்கும் போதுமான ஈரப்பதம் அவசியம். கோடையோ, குளிரோ எல்லா காலங்களிலும் பாதத்திற்கு ஈரப்பதம் தேவைப்படுகிறது. அப்படி ஈரப்பதம் கிடைக்காததால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. அதை அலட்சியம் செய்யும் போது வலி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

பாத வெடிப்பு ஏன் ஏற்படுகிறது… தவிர்க்க என்ன வழி?

பாதத்துக்கு ஈரப்பதம் கிடைப்பதை உறுதி செய்ய மாஸ்ச்சரைஸிங் க்ரீமை தடவ வேண்டும். பாத வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள் இதற்கென உள்ள பிரத்தியேக க்ரீமை குளித்து முடித்ததும் நன்கு சுத்தம் செய்த பிறகு போட வேண்டும்.

மிக ஆழமான பாதவெடிப்பாக இருந்தால் பாதத்தை வெதுவெதுப்பான நீரில் 15- 20 நிமிடம் ஊறவைத்து மென்மையாக சோப் போட்டுக் கழுவ வேண்டும். அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக பாதத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

பருத்தித் துணியைக் கொண்டு கால்களை மென்மையாக ஒத்தி எடுத்து எப்சம் உப்பு கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். அதன் மீது லாவண்டர், யூக்கலிப்டஸ் போன்ற எசன்ஷியல் எண்ணெய்களைத் தடவலாம்.

தூங்கச் செல்வதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை (க்ரீம் இல்லை, கற்றாழையை வெட்டுவதால் கிடைக்கும் திரவம்) தடவ வேண்டும். அது மிகச்சிறந்த ஆன்டி பாக்டீரியலாக செயல்படும். பாதவெடிப்பில் உள்ள காயங்கள், புண்களை ஆற்றும்.

தேன் கூட பாதவெடிப்பை ஆற்றும். தேனில் ஆன்டி பாக்டீரியல் திறன் உள்ளது. அது புண்களை ஆற்றும். பாத சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

தொடர்ந்து தேங்காய் எண்ணெய்யைப் பாதங்களில் தடவி வருவது பாத வெடிப்பை வராமல் தடுக்கும். பாத வெடிப்பு வந்தவர்கள் தேங்காய் எண்ணெய்யை அடவி வர விரைவில் பாத வெடிப்பு சரியாகும்.

நன்கு பழுத்த வாழைப்பழங்களை மசித்து பாதம் மற்றும் காலில் தடவி வர பாதங்கள் மென்மையாகும். பழங்கள் நன்கு பழுத்திருக்க வேண்டும். காயாக இருந்தால் அதில் உள்ள அமிலங்கள் புண்களை அதிகமாக்கிவிடும்.

காலில் வாழைப் பழங்களை மசித்து தடவி 20 நிமிடங்கள் ஊற விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் இப்படி செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம். வாழைப்பழம் மிகச்சிறந்த மாஸ்ச்சரைசராக செயல்படும். மேலும் அதில் உள்ள வைட்டமின் ஏ, பி6, சி உள்ளிட்ட சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.