கறுப்பான கழத்து அழகாக மாற வேண்டுமா… இதை டிரை செய்து பாருங்கள்!

 

கறுப்பான கழத்து அழகாக மாற வேண்டுமா… இதை டிரை செய்து பாருங்கள்!

சிலருக்கு முகம் பொலிவாக இருக்கும். ஆனால் முகத்தில் இருக்கும் நிறம், பொலிவு கழுத்து பகுதியில் இல்லாமல் கறுத்துப்போய் பார்க்க அசிங்கமாக இருக்கும். இதன் காரணமாகவே முகத்தின் பொலிவு குறையும். கழுத்துப் பகுதி நிறம் கறுத்துப் போக முக்கிய காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் முறையான பராமரிப்பு இன்மைதான். சில வகையான ரசாயனங்கள் சருமத்தின் நிறத்தை மாற்றி கறுத்துப்போகச் செய்துவிடுகிறது. நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக்ஸ், சுற்றுச்சூழல் மாசு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக கழுத்துப் பகுதி கறுத்துப்போகலாம். பொலிவான கழுத்தைப் பெற வீட்டிலேயே எளிய முயற்சிகளை செய்து பார்க்கலாம்.

கறுப்பான கழத்து அழகாக மாற வேண்டுமா… இதை டிரை செய்து பாருங்கள்!

1. கற்றாழை ஜெல்

மிக எளிதில் கிடைக்கும் மிகச்சிறந்த மூலிகை கற்றாழை. இதன் ஜெல்லை எடுத்து கழுத்துப் பகுதியில் தடவி ஊற விட வேண்டும். கற்றாழையில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின், தாது உப்புக்கள் கழுத்துப் பகுதி சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிக அளவில் நடப்பதைத் தடுக்கிறது. கற்றாழையின் சதைப் பகுதியை வெட்டி, அதில் இருந்து ஜெல்லை எழுத்து நேரடியாக கழுத்தில் பூசலாம். குளிப்பதற்கு முன்பு தடவி 30 முதல் 45 நிமிடங்கள் ஊறவிட்டுக் குளிக்கலாம். இப்படிச் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

2. ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சருமத்தின் பி.எச் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கழுத்துப் பகுதியில் அதிக அளவில் உள்ள கறுப்பு நிற செல்களை அகற்றுகிறது. சிறிது தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து பஞ்சில் நனைத்துத் தடவ வேண்டும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர வேண்டும்.

3. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் இ அதிக அளவில் உள்ளது. மேலும் இது ப்ளீச்சிங் ஏஜென்டாகவும் செயல்படுகிறது. இதை தொடர்ந்து தடவி வந்தால் சருமம் பொலிவு பெறும். பாதாம் எண்ணெய்யைக் கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பாதாம் எண்ணெய்யைச் சருமம் ஈர்த்துக்கொள்ளும். எனவே, இதைக் கழுவ வேண்டும் என்று அவசியம் இல்லை.