கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

பெரும்பாலானோருக்கு கண்ணின் கீழ் கருவளையம் இருக்கும். இது பல்வேறு காரணங்களால் உருவாகிறது. இதை நீக்குவது அவ்வளவு கடினமான வேலையல்ல. கருவளையங்களை எப்படி எளிதாக நீக்குவது என்பது குறித்து மருத்துவர்களே சொன்ன சில ஹோம் ரெமிடிக்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்..

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

பொதுவாக வயது முதிர்வின் போது கண்ணுக்கு கீழ் இருக்கும் தோல் மிருதுவாகிவிடும். அதனால், கருமையான ரத்தம் தோலை தாண்டி வெளியே தெரியும். அழற்சி, சரியான தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் கருமை ஏற்படுகிறது. இதை பெரிய நோயாகவெல்லாம் கருத வேண்டிய அவசியம் இல்லை. கருமை அதிகரிக்க அதிகரிக்க, அதை நீக்கும் முறை கடினமானதாக மாறிவிடும். அதனால், அதை சரி செய்வது சிறந்தது.

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

வீட்டில் நாம் பயன்படுத்தும் காய்கறிகளைக் கொண்டே இதை நீக்கி விடலாம். குறிப்பாக கோடைகாலத்தில் விலை மலிவாக கிடைக்கும் வெள்ளரிக்காய் கருமையை போக்குவதில் சிறந்தது. பெரும்பாலானோர் கண்ணின் குளிர்ச்சிக்காக வெள்ளிரிக்காயை வெட்டி கண்ணின் மேல் வைத்து 10 நிமிடம் அப்படியே இருப்பார்கள். இது கண்ணுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு கருமையை நீக்கும். வெப்பத்தை இது போக்குவதால் கரு வளையத்தை நீக்கும் அருமருந்தாக இது செயல்படுகிறது.

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

அடுத்தது ​உருளைக்கிழங்கு. கருவிழி பிரச்னைக்கு சிறந்த தீர்வு இது. ​உருளைக்கிழங்கை நன்றாக கழுவிவிட்டு வட்ட வடிவில் துண்டாக்கி கொள்ள வேண்டும். அதை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்து விட்டு பின்னர் கண்ணின் மேல் வைத்தால், கரு வளையம் நீங்கும். கண்ணனுக்கு புத்துணர்ச்சி தரும்.

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

நம் உடலில் வைட்டமின் சி குறைபாடு இருப்பதால் கூட கருவளையம் தோன்றக்கூடும். இந்த குறைபாட்டால் பல நோய்கள் ஏற்படும் நிலையில், கண் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால், வைட்டமின் சி அதிகமாக இருக்கும் பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

இந்த ட்ரிக் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போதெல்லாம் எளிதாக கையில் கொண்டு செல்லும் வகையில் டீ அல்லது காபி பேக் கடைகளில் கிடைக்கிறது. உபயோகப்படுத்தப்பட்ட டீ பேக் சருமத்துக்கு மிக நல்லது. அதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன் கருவளையம் உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும். பயன்படுத்தப்பட்ட டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, அதை எடுத்து கண்களில் ஒற்றி வைத்தால் கரு வளையத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

உடலுக்கு குளிர்ச்சி தருவது தக்காளி. குளிர்ச்சி மிகுந்த காய்கறிகளை கண்களில் வைப்பது சிறந்தது என்பதால், தக்காளியை வெட்டிக் கூட கண்களில் வைக்கலாம். இதுமட்டுமில்லாமல், ரெட்டினால் கிரீமை கூட பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரிடம் ஆலோசித்து உபயோகப்படுத்துவது சிறந்தது.

கண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா?.. உங்களுக்கான சில டிப்ஸ்!

இதே போன்று தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கண்களின் கீழ் தடவலாம். மெதுவாக கண்களில் அப்ளை செய்து மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து கரு வளையம் குறையும்.. மேற்கண்ட இந்த டிப்ஸ்களை நீங்கள் அடிக்கடி செய்து வரும் போது கருவளையம் குறைவதை நீங்களே உணர முடியும்…!