Home விளையாட்டு கிரிக்கெட் "HOME OF DHONI FAN" தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

“HOME OF DHONI FAN” தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்!

கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், ரூ.1.50 லட்சம் செலவு செய்து தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய சம்பவம் வியப்படையச் செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஒரே விஷயம் ஐபிஎல் போட்டி. தான் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் தல தோனிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த மேட்ச் ஜெயிக்குமா என ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நேரத்தில், அதிரடியாக விளையாடி பல போட்டிகளை ஜெயிக்க வைத்த தோனி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், தோனி மீதான பேரன்பில் ரசிகர் ஒருவர் அவரது வீட்டையே மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசிய சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன், துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கிறார். தோனி மீது அளவுக் கடந்த அன்பைக் கொண்ட இவர், அதனை வெளிப்படுத்தும் விதமாக சுமார் ரூ.1.50 செலவு செய்து தனது வீடு முழுவதையும் சிஎஸ்கே அணியின் அடையாளமான மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசியுள்ளார்.

அதோடு தோனியின் படத்தையும் சிஎஸ்கே லோகோவான சிங்கத்தையும் சுவரில் வரைந்திருக்கிறார். மேலும், அந்த வீட்டுக்கு “HOME OF DHONI FAN” என்றும் பெயர் சூட்டியுள்ளார். அந்த வீட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

உங்களுக்கு அல்சர் பிரச்னை இருக்கா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க போதும்!

நமது உணவில் அன்றாடம் பயன்படுத்தும் முட்டைக்கோஸ், தன்னுள் மனித உடலுக்கு தேவையான பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனை, ஜூஸாக அரைத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால்,...

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய்...

விளாத்திக்குளம் அருகே களைகட்டிய மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே கோவில் குமரெட்டியாபுரத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். விளாத்திக்குளம் அடுத்த கோவில்...

“உறங்கியவன் தொடையில் திரித்த வரை லாபம்; சந்தடி சாக்கில் உலை வைக்கும் மோடி-எடப்பாடி”

கல்பாக்கம் அணு உலைக்கு அருகாமையில் உள்ள 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப் பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து...
TopTamilNews