“நாட்டை இந்தி ஒற்றுமைப்படுத்துகிறது” : உள்துறை அமைச்சர் அமித்ஷா

 

“நாட்டை இந்தி ஒற்றுமைப்படுத்துகிறது” : உள்துறை அமைச்சர் அமித்ஷா

நாட்டை இந்தி ஒற்றுமைப்படுத்துகிறது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு என்ற சொல் கடந்த மாதங்களாக தமிழகத்தில் மேலோங்கி ஒலித்து வருகிறது.

“நாட்டை இந்தி ஒற்றுமைப்படுத்துகிறது” : உள்துறை அமைச்சர் அமித்ஷா

மும்மொழி கொள்கை, திமுக கனிமொழி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் இந்தியரா என்ற கேள்வியை எதிர்கொண்டது முதல் இயக்குநர் வெற்றிமாறன் விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தீவிரவாதி போல தான் நடத்தப்பட்டதாக கூறியது என பல காரணங்கள் இளைஞர்கள் மத்தியில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், “நாட்டு மக்கள் தங்களது தாய் மொழியுடன் இந்தியில் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டும்” என்று கேட்டுகொண்டுள்ளார். இந்தி தினத்தையொட்டி இவ்வாறு கூறியுள்ள அவர், ‘இந்தியை வலுப்படுத்த பங்களித்த அனைவருக்கும் நன்றி.நாட்டுக்கு மொழிதான் முக்கிய அடையாளம். நாட்டை இந்தி ஒற்றுமைப்படுத்துகிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் ஒரே சமயத்தில் மாநில மொழிகள் மற்றும் இந்தி வளர்ச்சி அடையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.