திருநீறு… தெய்வீகமானது மட்டுமல்ல, மருத்துவக்குணம் நிறைந்தது!

திருநீறு… நெற்றியில் திருநீறு அணிவது இந்து மதத்தில் பன்னெடுங்காலமாக பின்பற்றப்படும் வரும் ஒரு நடைமுறை. அவரவர் சம்பிரதாயப்படி திருநீறு எனும் விபூதியையோ, திருமண்ணையோ நெற்றியில் விதம்விதமாக இட்டுக்கொள்கிறார்கள். நெற்றியில் அணியும் திருநீறு மகிமை நிறைந்தது, ஐஸ்வர்யம் தரக்கூடியது என்று சொல்லப்படுகிறது.

நமது அவ்வைப்பாட்டி ஒருபடி மேலே சென்று, `நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ்’ என்கிறார் . அதாவது, திருநீறு இல்லாத நெற்றியும், நெய் சேர்க்காத உணவும் வீண் என்று சொல்லியிருக்கிறார். திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகத்தில், மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு, தெய்வீக ஆற்றல் தரும் புனிதச் சின்னம், பிறப்பு இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து இறைவனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு என்று போற்றிப் புகழ்ந்து சொல்லப்பட்டுள்ளது.

வர்ம ஸ்தானம்:
புராணங்களும், இதிகாசங்களும் புகழும் இந்த திருநீறுக்கு அப்படி என்ன மகிமை இருக்கிறது என்று ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லாத, விருப்பமில்லாதவர்கள் கேட்கலாம். குறிப்பாக நெற்றியில் திருநீறு பூசுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. மனித உடலில் நெற்றி மிக முக்கிய பாகமாகும். அதன் வழியாகத்தான் சக்தி மிக அதிகமாக வெளிப்படுவதுடன் உள்ளிழுக்கப்படவும் செய்கிறது. நெற்றி ஒரு வர்ம ஸ்தானம் என்கிறது மருத்துவம். சூரியக் கதிர்களின் ஆற்றலை உள்ளிழுத்து நெற்றி வழியாகக் கடத்தும் வேலையை திருநீறு செய்வதால்தான் நெற்றியில் திருநீறு பூசப்படுகிறது.

சுண்டு விரலை நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் நேராகப் பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யப்படுவதே ஆக்ஞா தியானம். பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கமாக ஆக்ஞா தியானம் சொல்லப்படுகிறது. ஆக்ஞா தியானத்தின்போது உடலில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், சூட்டைத் தணிக்க நெற்றியில் சந்தனம் பூசுவார்கள். மனித உடலில் மிக முக்கியமான ஹார்மோனைச் சுரக்கும் பிட்யூட்டரி சுரப்பி தூண்டப்படும் இடம் நெற்றி. ஆக்ஞா தியானம் செய்யப்படுவதே இந்த சுரப்பியைத் தூண்டுவதற்காகத்தான் என்று சொல்லப்படுகிறது.

மருத்துவக் குணம்:
நெற்றியைத் தவிர உடலில் திருநீறு அணியும் இடங்களாக பதினெட்டு இடங்கள் சொல்லப்படுகிறது. உச்சந்தலை (தலையின் நடுவே), நெற்றி, மார்பு, தொப்புளுக்கு சற்று மேலே, இடது தோள்பட்டை, வலது தோள்பட்டை, இடது கையின் நடுவே, வலது கையின் நடுவே, இடது மணிக்கட்டு, வலது மணிக்கட்டு, இடது இடுப்பு, வலது இடுப்பு, இடது காலின் நடுப்பகுதி, வலது காலின் நடுப்பகுதி, முதுகுக்கு கீழே, கழுத்து முழுவதும், வலது காதில் ஒரு பொட்டு, இடது காதில் ஒரு பொட்டு என பதினெட்டு இடங்களில் திருநீறு அணிய வேண்டும்.

திருநீறு அணிவதால் தடையற்ற இறை சிந்தனை, நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லவர்கள் நட்பு என எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். இவை மட்டுமன்றி பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது திருநீறு. திருநீறு அணிவதற்கென்று ஒரு கால நேரம் இருக்கிறது. அதை அணியும் நேரம் மற்றும் திருநீற்றின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.

அதிகாலையில் கண் விழித்து கை கால் முகம் கழுவி நெற்றியிலும் மார்பு பகுதியிலும் இரண்டு புஜங்களிலும் சில வர்ம ஸ்தானங்களிலும் நம் மூதாதையர் திருநீறு பூசுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கால ஓட்டத்தில் இன்றைக்கு அது பெரும்பாலும் குறைந்துவிட்டது. நனைக்காத திருநீறு நோய் அணுக்களை அழிக்கும்; நனைத்த திருநீறு உடலில் அதிகப்படியாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தி படைத்தது.
திருநீறு மிகச் சிறந்த கிருமிநாசினி. தலைக்கு குளித்ததும் நெற்றி நிறைய திருநீறு பூசுவதால், நெற்றிப்பகுதியில் உள்ள நீர் மற்றும் வியர்வையை உறிஞ்சிக்கொள்ளும். இதனால் சளி மற்றும் தலைவலி ஏற்படாமல் பாதுகாக்கும். திருநீற்றில் நிறைய மருத்துவக் குணங்கள் அடங்கியிருக்கிறது என்பதை நம் சித்தர்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்

நெற்றி, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் மற்றும் எலும்புகள் இணையும் மூட்டுப்பகுதிகளில் தினமும் பூசி வந்தால் அந்த இடங்களில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றும். குறிப்பாக மூட்டு எலும்புப் பகுதிகளில் திருநீறு பூசுவதால் எலும்புத் தேய்மானம், ஜவ்வு கிழிதல் போன்ற மூட்டு நோய்கள், மூட்டு வலி போன்றவை நீங்கிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் அந்த நோய்கள் வராமல் தடுக்கப்படும்.

Most Popular

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் மதிப்பும், மரியாதையும் கூடும்!

இன்றைய ராசிபலன்கள் 06-07-2020  (திங்கட்கிழமை) நல்லநேரம் காலை 6.15 முதல் 7.15 வரை மாலை 4.45 முதல் 5.45 வரை ராகுகாலம் காலை 7.30 முதல் 9 வரை எமகண்டம் காலை 10.30 முதல் 12 வரை மேஷம் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவும்...

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது...

மத்திய பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம்… காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதியுமான் லோதி பா.ஜ.க.வில் ஐக்கியம்..

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நேரம் சரியில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையால், 18 ஆண்டுகளாக அந்த கட்சியின் தீவிர விசுவாசியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அந்த கட்சியிலிருந்து...

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. எம்.பி., எம்.எல்.ஏ. மீது டி.எம்.சி. குண்டர்கள் தாக்குதல்… பா.ஜ.க. எம்.பி. சவுமித்ரா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து...
Open

ttn

Close