காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல் ராமநாதபுரம் – தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் புரெவி புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மாண்டலமாக வலுவிழந்தாலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது .

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

இது ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளது. புரெவி புயல் கரையை கடக்கும்போது ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேசமயம் படிப்படியாக காற்றின் வேகம் குறையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

புரெவி புயல் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை!

இந்நிலையில் கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது. அந்த வகையில் மழை காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நேற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அா்ஜூன் சா்மா  தெரிவித்துள்ளார்.