“விநாயகரிடமும் வேலையை காமித்த கொரானா”-50000 சிலைகளை இலவசமாக தந்து கூட்டத்தை தடுக்கும் ஹைதராபாத் மாநகராட்சி

“விநாயகரிடமும் வேலையை காமித்த கொரானா”-50000 சிலைகளை இலவசமாக தந்து கூட்டத்தை தடுக்கும் ஹைதராபாத் மாநகராட்சி

.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை எப்போதும் போல அதிக உற்சாகத்துடன் கொண்டாட முடியாமல் கொரானா தடுத்துள்ளது .இதனால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

“விநாயகரிடமும் வேலையை காமித்த கொரானா”-50000 சிலைகளை இலவசமாக தந்து கூட்டத்தை தடுக்கும் ஹைதராபாத் மாநகராட்சி
வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை எப்போதும் போல உற்சாகமாகவும் ,பிரமாண்டமாகவும் கொண்டாட முடியாமல் இந்த கொரானா செய்து விட்டது .ஹைதராபாத்தில் வரும் விநாயகர் சதுர்த்திக்காக கூட்டம் கூடுவதை தவிர்க்க ஹைதராபாத் கார்ப்பரேஷன் 50000 களிமண் சிலைகளை மக்களுக்கு இலவசமாக கொடுக்கவுள்ளது .இதற்காக வரும் 16ம் தேதி முதல் கௌண்ட்டர்கள் திறந்து கைவினை கலைஞர்களிடமிருந்து விநாயகர் சிலைகள் கொள்முதல் செய்யப்படுமென்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.
எப்போதும் ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள உசைன் சாகர் ஏரியில் 169க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு அதன் எண்ணிக்கையும் ,சிலையின் உயரமும் குறைக்கப்படும் .
மேலும் அமைச்சர் தலசனி ஸ்ரீனிவாச யாதவ் கூறுகையில் இந்த ஆண்டு கொரானா காரணமாக மக்கள் கூட்டம் கூடாமல் எளிமையாக கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார் ,மேலும் சுற்று சூழலை பாதுகாக்க பிளாஸ்டர் சிலைகள் பயன்பாட்டை குறைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் .கொரானா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தோடு இந்த ஆண்டு கோவில்களில் பிரசாதம் எதுவும் வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார் .இந்த கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தினை நாம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் காண்பது சந்தேகம் .

“விநாயகரிடமும் வேலையை காமித்த கொரானா”-50000 சிலைகளை இலவசமாக தந்து கூட்டத்தை தடுக்கும் ஹைதராபாத் மாநகராட்சி