• February
    29
    Saturday

Main Area

Main



8 மாத கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய மருத்துவமனை ஊழியர்கள்

hiv
hiv

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு, எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அப்பெண்ணின் உடலில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பதாகவும், உடனே ரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதனையடுத்து, அப்பெண்ணுக்கு ரத்தம் ஏற்றும் பணிகளில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி, வாலிபர் ஒருவரிடம் தானமாக பெறப்பட்ட ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் செலுத்தப்பட்டது.

ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரத்தம் தானம் செய்த வாலிபருக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருப்பதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.