யாராவது விருப்பத்துடன் பா.ஜ.க.வில் சேரும்போது அதை குதிரை பேரம் என்கிறார்.. கமல் நாத்தை கிண்டலடித்த சிவ்ராஜ்

யாராவது விருப்பத்துடன் பா.ஜ.க.வில் சேரும்போது அதை குதிரை பேரம் என்கிறார்.. கமல் நாத்தை கிண்டலடித்த சிவ்ராஜ்

யாராவது விருப்பத்துடன் பா.ஜ.க.வில் இணையும்போது அதை குதிரை பேரம் என்று அவர் சொல்கிறார் என கமல் நாத்தை சிவ்ராஜ் சிங் சவுகான் கிண்டலடித்தார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கமல் நாத் அண்மையில் பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியதாவது: பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ், கமல் நாத் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பா.ஜ.க.விடம் யாரிடமும் போகவில்லை, காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைகின்றனர். கமல் நாத் இதை செய்யும்போது அதை அவர் மேலாண்மை என்பார்.

யாராவது விருப்பத்துடன் பா.ஜ.க.வில் சேரும்போது அதை குதிரை பேரம் என்கிறார்.. கமல் நாத்தை கிண்டலடித்த சிவ்ராஜ்
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

ஆனால் யாராவது விருப்பத்துடன் பா.ஜ.க.வில் சேரும்போது, அது குதிரை பேரமா?. இன்றும் கூட கமல் நாத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை தன் கட்சிக்கு அழைக்கிறார். யாராவது குதிரை பேர அரசியலில் ஈடுபட்டால், அது கமல்நாத். மத்திய பிரதேச அரசியலுக்கு அவர் அழுக்கை கொண்டு வந்துள்ளார். அவர் விரும்பும் அளவுக்கு எவ்வளவு முயற்சியும் செய்யட்டும் ஆனால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எங்கும் போகமாட்டார்கள். கொள்கை மற்றும் சித்தாந்தாத்துக்காக எங்கள் மக்கள் பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாராவது விருப்பத்துடன் பா.ஜ.க.வில் சேரும்போது அதை குதிரை பேரம் என்கிறார்.. கமல் நாத்தை கிண்டலடித்த சிவ்ராஜ்
பா.ஜ.க.

கடந்த சில தினங்களுக்கு முன் கமல் நாத், அண்மையில் நடந்து முடிந்த 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் உண்மைக்கு முழு மனதுடன் வாக்களித்துள்ளனர். பா.ஜ.க. தாங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறோம் என்பதை உணர்ந்துள்ளனர். ஆகையால் அவர்கள் மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. மக்களை மறந்து விட்டது மற்றும் மீண்டும் குதிரை பேரத்தை தொடங்கி விட்டது. பா.ஜ.க. சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை அணுகினர். மத்திய பிரதேச மக்கள் இந்த அரசை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்து இருந்தார்.