திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

 

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

நாடு முழுவது யாத்திரை செய்து முருகன் திருத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்து கந்தக்கடவுளின் பெரும் புகழை திருப்புகழாக பாடி பரவியவர் அருணகிரிநாதர்.

அருணகிரிநாதர் இளமைக்காலம் குறித்து அனேக சர்ச்சைக்குரிய விஷயங்கள் உண்டு. அதில் அவர் விலைமாதர் வசப்பட்டு செல்வத்தையும் உடலை நலம் இழந்தது பிரதானமாக பேசப்படுகிறது. பிறரால் வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட அருணகிரியார் மனம் நொந்து உயிரை போக்கிக் கொள்ள திருவண்ணாமலை கோபுரத்தின் ஏறி கீழே குதித்தார்.

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

கீழே குதித்த அருணகிரிநாதரை ஓர் அன்புக்கரம் தாங்கிப்பிடித்து தரை இறக்கியது. அப்படி தரை சேர்த்தவர் கருணை கடலான கந்தப்பெருமான் தான். அருணகிரிநாதருக்கு ‘சும்மா இரு சொல்லற’ என்று முருகன் உபதேசமும் செய்தார். முருகனின் உபதேசத்தை ஏற்று பேச்சைக் குறைத்து மௌனம் விரதம் பூண்ட அருணகிரியார். நாடெங்கும் உள்ள திருத்தலங்களில் குடிகொண்டுள்ள முருகன் கோயில் சென்று தரிசனம் செய்யும் பெரும் யாத்திரையை தொடங்கினார்.

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

திருச்சியை அடுத்த வயலூர் தலத்தில் முருகனை தரிசித்து விட்டு அங்கேயே உறங்கிய போது, கனவில் வந்த முருகன் கட்டளைப்படி திருச்சியில் விராலிமலை சென்றார். அங்கு அவருக்கு நேரில் காட்சி அளித்த முருகன், அருணகிரிநாதர் நாவில் தனது வேலால் பிரவணமந்திரத்தை எழுதினார். அதன் பின் மடைதிறந்த வெள்ளமென பக்தி பெருக்குடன் பரசவமாகி பாடல் புனைய தொடங்கினார் அருணகிரியார்.

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

என பாடத் தொடங்கிய அருணகிரிநாதர், நாடங்கும் யாத்திரை மேற்கொண்டு முருகன் பெருமான் மீது 16000 பாடல்கள் இயற்றினார். அதில் தற்போது 2000 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. திருப்புகழ் பாடல்கள் 1307, கந்தர்அந்தாதி 102 , கந்தர் அலங்காரம் 108 , கந்தரனுபூதி 52, திருவகுப்பு 25, வேல் விருத்தம் 11, மயில் விருத்தம் 11 திருவெழுக்கூற்றுருகை ஆகியன அருணகிரிநாதர் அருளியது.

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

யாத்திரை முடிந்து திருவண்ணாமலை திரும்பி அருணகிரிநாதருக்கும் அந்நாளில் அப்பகுதியை ஆட்சி செய்த பிரபுடதேவராயன் எனும் மன்னின் அமைச்சர் சம்பந்தாண்டனுக்கும் இடையே எழுந்த போட்டியில் அருணகிரி வென்றார். அதனால் பொறாமை கொண்டு அருணகிரியை அழிக்க சம்பந்தாண்டன் உறுதிபூண்டார். ஒருமுறை மன்னருக்கு கண் வலி ஏற்படவே, அதற்கு மருந்தாக தேவலோக பாரிஜாதமலர் தேவைப்பட்டது. அதனை எடுத்து வர சரியானவர் அருணகிரி தான் என அவரை மாட்டிவிட்டார் சம்பந்தாண்டன். வேறுவழியின்றி அருணகிரிநாதர் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் தன் உடலில் இருந்து ஒரு கிளி உடலில் புகுந்து தேவலோகம் பறந்தார். அப்போது சம்பந்தாண்டன் அவரை உடலை எடுத்து எரித்துவிட, பாரிஜாத மலருடன் திரும்பி அருணகிரியார் கிளியாகவே வாழ நேர்ந்தது.

திருப்புகழ் தந்த அருணகிரிநாதரின் அவதாரத் திருநாள் இன்று, அவரது குருபூஜையும் இன்று தான்!

அந்த கிளி வாழ்ந்த திருவண்ணாமலை கோபுரம் இன்றும் கிளி கோபுரம் எனறழைக்கப்படுகிறது. அருணகிரியார் கிளியாகவே இருந்து பாடியது தான் கந்தர் அலங்காரம் பாடல்களாகும். இன்றும் முருகபக்தர்களுக்கு வழிகாட்டுவதாக அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள் விளங்குகின்றன. அருணகிரி வழிநின்று முருகனருள் பெற்று உய்வோம்.

– மு.ரா.சுந்தரமூர்த்தி