‘ஹாப்பி மெட்ராஸ் டே’ ன்னு சொல்றதுக்கு முன்னாடி இதைத் தெரிஞ்சுக்கோங்க!

‘ஹாப்பி மெட்ராஸ் டே’ ன்னு சொல்றதுக்கு முன்னாடி இதைத் தெரிஞ்சுக்கோங்க!

இன்னக்கு ரொம்ப உற்சாகமா ‘மெட்ராஸ் டே’ கொண்டாடி வர்றோம். அப்படி நாம பொறந்த நாள் கொண்டாடுகிற இந்த சென்னை நகரம் உருவாகி 379 வருஷங்கள் ஆயிடுச்சு. போன 2004 ம் வருஷத்துல இருந்து தான் நம்ம சென்னை மக்கள் ‘மெட்ராஸ் டே’ ன்னு சென்னையோட பொறந்த நாளை ரொம்ப உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடறாங்க!

ஆனா இந்த ‘மெட்ராஸ் டே’ கொண்டாடுறதுக்கு ஆரம்பமா இருந்த நிகழ்ச்சி ரொம்பவே சுவாரஸ்யமானது. இந்த நகர் உருவானதுக்கு பின்னாடி பெரிய வரலாறு இருக்கிறது. ச்சும்மா.. ச்சும்மா மதுரை, திருச்சி, திருநெல்வேலின்னு எல்லா மாவட்ட மக்களுமே அவங்களோட சொந்த ஊரைப் பற்றி பெருமையா வரலாறு சொல்றாங்களே… இதைப் படிச்சு முடிச்சதும், நம்ம சென்னை பசங்களுக்கு ஷேர் பண்ணுங்க… நம்ம ஊரைப் பற்றி நாமலும் வரலாறு சொல்வோமுல்ல…
சென்னப்ப நாயக்கருக்கு ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். வெங்கடப்ப நாயக்கருக்கு சொந்தமான வங்கக் கடலோரம் இருந்த ஒரு சிறிய பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி ஆங்கிலேயே வணிகர் பிரான்சிஸ் டே வாங்கினார். அன்று அந்த ஆங்கிலேய வணிகர் இடத்தை வாங்கிய நாளை தான் இன்று சென்னை நாளாக கொண்டாடிக்கிட்டு வர்றோம். வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய இடத்தில் பிரான்சிஸ் டே ஒரு கிடங்கு வைத்து அந்த கிடங்கில் வணிகம் செய்து வந்தார்.

அந்த இடம் தான் தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை. தற்போது  தமிழக தலைமைச் செயலகமாக அந்த இடத்தில் தான்  இயங்கி வருகிறது. பின் நாட்களில் சென்னை ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றது. பின்னர் சென்னை ஆங்கிலேயர் ஆட்சிக்கு கட்டுப்பாட்டுக்கு கீழ் சென்றது. இதை அடுத்து சென்னை தொழில் மற்றும் வணிக நகரமாக உருவெடுத்து தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக மாறியது. அடுத்தடுத்து சென்னை வணிகம் , தொழில் மட்டுமல்லாமல் மருத்துவம், வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் , சினிமா, மென்பொருள் சேவை, என மிக பெரிய வளர்ச்சி அடைந்தது. சென்னையில் குறிப்பாக வாகன தயாரிப்பு தேவையில் இந்தியாவின் டெட்ராயிடாக வலம் வருகிறது.