“ஆஸ்பத்திரி தோற்றத்தில் ,நோயாளி வேஷத்தில்..” -ஆம்புலன்சுக்குள் நடந்த அட்டகாசம்

 

“ஆஸ்பத்திரி தோற்றத்தில் ,நோயாளி வேஷத்தில்..” -ஆம்புலன்சுக்குள் நடந்த அட்டகாசம்

ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து புது தில்லி செல்லும் பாதையில் ஒரு கும்பல் ஒரு போலி நோயாளியுடன் ஆம்புலன்சில் போதை பொருளை கடத்தியது .


டெல்லி குலாபி பாக் பகுதியில் ஆம்புலன்சில் போதை பொருள் கடத்துவதாக புகார் வந்ததை அடுத்து டெல்லி வடக்கு மாவட்ட போலீசார் சோதனையை தொடங்கினர். அப்போது அந்த சோதனையில் டெல்லி காவல்துறை நான்கு பேரை கைது செய்தனர் .அப்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 181கிலோ கஞ்சாவின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 1.8 கோடி ரூபாய் என்று போலீசார் கூறினர்

பிறகு தில்லி காவல்துறையினர் பிடிபட்டவர்களின் வீட்டில் சோதனை நடத்தினர்.
போலீசாரின் சோதனைகள் மற்றும் தொடர்ச்சியான விசாரணையைத் தொடர்ந்து, அக்டோபர் 17 ம் தேதி, ஆந்திராவின் விசாகப்பட்டினம், மோரி கேட்டில் வசிக்கும் குடேபு நாகேஷ்வர் மற்றும் போலேஜு பாபு ராவ் மற்றும் மோரி கேட்டில் வசிக்கும் ஷோல் ராஜ் ஆகியோரை கைது செய்தார்கள் .போலீஸ் விசாரணையில்
போலேஜு பாபு ராவ் மற்றும் குடேபு நாகேஸ்வர ராவ் ஆகியோர் ஒரு போலியான நோயாளியுடன் ஆம்புலன்சில் கஞ்சாவை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு வந்தனர் .அங்கு ஷோல் ராஜ் என்பவர் மூலம் விமானம் மூலம் டெல்லிக்கு அந்த கஞ்சாவை கடத்த திட்டமிட்டிருந்தார்கள் .இப்படி பல ஆண்டுகளாக அவர்கள் கஞ்சாவை கடத்திய விஷயம் அம்பலமானது .

“ஆஸ்பத்திரி தோற்றத்தில் ,நோயாளி வேஷத்தில்..” -ஆம்புலன்சுக்குள் நடந்த அட்டகாசம்