ஹேக் செய்யப்பட்டது ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனல்; வீடியோக்கள் அனைத்தும் டெலிட்!

 

ஹேக் செய்யப்பட்டது ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனல்; வீடியோக்கள் அனைத்தும் டெலிட்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடெங்கிலும் சோஷியல் மீடியாக்களின் புழக்கம் அதிகரித்திருக்கும் சூழலில் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் தரவுகளை கைப்பற்றுவதற்கென மர்ம நபர்கள் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது. ஹேக்கிங் தெரிந்த எல்லோராலும் இதை செய்திட முடியும். அண்மையில் நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவரது பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதோடு பெயர் மற்றும் புகைப்படமும் மாற்றம் செய்யப்பட்டது.

ஹேக் செய்யப்பட்டது ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனல்; வீடியோக்கள் அனைத்தும் டெலிட்!

இந்த பிரச்னையை தமிழக டிஜிபியின் கவனத்துக்கு கொண்டு சென்றார் குஷ்பு. தனது ட்விட்டர் கணக்கை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டார். ட்விட்டர் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சைபர் கிரைம் போலீசார், குஷ்புவின் ட்விட்டர் கணக்கை மீட்டுக் கொடுத்தனர்.

ஹேக் செய்யப்பட்டது ஹிப்ஹாப் ஆதி யூ டியூப் சேனல்; வீடியோக்கள் அனைத்தும் டெலிட்!

இந்த நிலையில், தற்போது ஹிப்ஹாப் ஆதியின் யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அவரது சேனலில் இருந்த ஜல்லிக்கட்டு, தமிழி உள்ளிட்ட அனைத்து வீடியோக்களையும் ஹேக்கர்ஸ் டெலிட் செய்துள்ளனர். இது தொடர்பாக ஹிப்பாப் ஆதி புகாரளிக்க உள்ளதாக தெரிகிறது.