பவுடர், சோப்பு விற்பனை வாயிலாக ரூ.2,009 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்

பவுடர், சோப்பு விற்பனை வாயிலாக ரூ.2,009 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்

2020 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.2,009 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல பான்ஸ் பவுடர், லக்ஸ், ரின் உள்ளிட்ட சோப்புக்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.2,009 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 8.7 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ரூ.1,848 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.

பவுடர், சோப்பு விற்பனை வாயிலாக ரூ.2,009 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்
இந்துஸ்தான் யூனிலீவர்

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.11,442 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.9,852 கோடியாக இருந்தது. ஆக, சென்ற காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 16.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

பவுடர், சோப்பு விற்பனை வாயிலாக ரூ.2,009 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்
இந்துஸ்தான் யூனிலீவர்

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.14 வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ஜி.எஸ்.கே. ஹெல்த்கேர் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துள்ளது. இந்த இணைப்பு நடவடிக்கை கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.