டிசம்பர் காலாண்டில் ரூ.1,921 கோடி லாபம் ஈட்டிய இந்துஸ்தான் யூனிலீவர்

 

டிசம்பர் காலாண்டில் ரூ.1,921 கோடி லாபம் ஈட்டிய இந்துஸ்தான் யூனிலீவர்

2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல பான்ஸ் பவுடர், லக்ஸ், ரின் உள்ளிட்ட சோப்புக்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் லாபமாக ரூ.1,921 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் ரூ.1,616 கோடியை லாபமாக ஈட்டியிருந்தது.

டிசம்பர் காலாண்டில் ரூ.1,921 கோடி லாபம் ஈட்டிய இந்துஸ்தான் யூனிலீவர்
இந்துஸ்தான் யூனிலீவர்

2020 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.11,872 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாயாக ரூ.9,808 கோடி ஈட்டியிருந்தது.

டிசம்பர் காலாண்டில் ரூ.1,921 கோடி லாபம் ஈட்டிய இந்துஸ்தான் யூனிலீவர்
இந்துஸ்தான் யூனிலீவர் பிராண்டுகள்

கடந்த டிசம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்கு விலை 15.8 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், 2020 காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்கு விலை 23.6 சதவீதம் அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்கின் விலை 0.34 சதவீதம் சரிந்து ரூ.2,390.75ல் முடிவுற்றது.