விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

பிரபல லக்ஸ், ரின் சோப்புக்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.1,881 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 7.2 சதவீதம் அதிகமாகும்.

விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

விளம்பரம் மற்றும் புரோமோஷன் செலவினங்களை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் குறைத்ததால் அந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் 4.4 சதவீதம் அதிகரித்து ரூ.10,560 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் வருவாயாக ரூ.10,114 கோடி ஈட்டியிருந்தது.

விளம்பர செலவினம் அதிரடி குறைப்பு…. ரூ.1,881 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர்…

கடந்த ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் விற்பனை அளவு அடிப்படையில் 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு சிறப்பு டிவிடெண்டாக ரூ.9.50 வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.