கொட்டிய வருவாய்… இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபம் ரூ.2,061 கோடி..

 

கொட்டிய வருவாய்… இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபம் ரூ.2,061 கோடி..

இந்துஸ்தான் யூனிலீவர் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,061 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல லக்ஸ், ரின் சோப்பு தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,061 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 9.6 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபமாக ரூ.1,881 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

கொட்டிய வருவாய்… இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபம் ரூ.2,061 கோடி..
இந்துஸ்தான் யூனிலீவர்

2021 ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் வருவாயாக ரூ.11,730 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 12.7 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் வருவாயாக ரூ.10,406 கோடி ஈட்டியிருந்தது.

கொட்டிய வருவாய்… இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபம் ரூ.2,061 கோடி..
இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபேது இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.82 சதவீதம் குறைந்து ரூ.2,359.25ஆக இருந்தது.