தே.பா.சட்டத்தில் திருமாவை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சாலை மறியல்

 

தே.பா.சட்டத்தில் திருமாவை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சாலை மறியல்

திருமாளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி ஆம்பூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

தே.பா.சட்டத்தில் திருமாவை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சாலை மறியல்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இந்து பெண்களை இழிவாக பேசியதாகவும், அதனால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் எஸ்.கே.ரோடு சாலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

தே.பா.சட்டத்தில் திருமாவை கைது செய்யக்கோரி இந்து முன்னணி சாலை மறியல்