“இந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம் கண்டிக்கத்தக்கது” : கி.வீரமணி ஆவேசம்!

 

“இந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம்  கண்டிக்கத்தக்கது” : கி.வீரமணி ஆவேசம்!

ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள பலர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் 37 பேரும் அடங்குவர். அப்போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார்.

“இந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம்  கண்டிக்கத்தக்கது” : கி.வீரமணி ஆவேசம்!

இதற்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , “தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது. இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று ராஜேஷ் கொடேஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எம்பி கனிமொழி, ராமதாஸ், வைரமுத்து உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“இந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம்  கண்டிக்கத்தக்கது” : கி.வீரமணி ஆவேசம்!

இந்நிலையில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி, “மத்திய சுகாதாரத்துறையின் யோகா பயிற்சிகள் அனைத்தும் இந்தியில் நடத்தப்பட்டது சரியானதுதானா? இந்தி ஆதிக்க சாம்ராஜ்ஜியம், இந்தி திணிப்பு, சமஸ்கிருத மயம் அரங்கேறுவது கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.