இந்தி படிக்க விருப்பமா? 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!

 

இந்தி படிக்க விருப்பமா? 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!

மத்திய அரசு நடைமுறை படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை, தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பி வருகிறது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கை, மும்மொழியை வலியுறுத்துவதால் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் இருமொழி கொள்கை முறையே தொடரும் என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். முதல்வர் இவ்வாறு தெரிவித்திருந்தும் கோவையில் ஒரு பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையின் போது இந்தி கற்க விருப்பமா? என கேள்விக் கேட்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தி படிக்க விருப்பமா? 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கோவையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் இருக்கும் தனியார் பள்ளியில், 1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை படிவத்தில் இந்தி மொழி கற்க விருப்பமா? அல்லது கைத்தொழில் ஒன்றை அதிகப்படியாக கற்க விருப்பமா? என கேள்விக் கேட்கப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இவ்வாறு மாணவர் சேர்க்கையில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.