எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த ஹிண்டால்கோ…. ஒரே காலாண்டில் ரூ.326 கோடி லாபம்….

எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த ஹிண்டால்கோ…. ஒரே காலாண்டில் ரூ.326 கோடி லாபம்….

ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த குழும நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.326 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38.1 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் தனிப்பட்ட லாபமாக ரூ.236 கோடி ஈட்டியிருந்தது.

எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த ஹிண்டால்கோ…. ஒரே காலாண்டில் ரூ.326 கோடி லாபம்….

2020 மார்ச் காலாண்டில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸின் தனிப்பட்ட செயல்பாடு வாயிலான வருவாய் 19.2 சதவீதம் குறைந்து ரூ.9,992 கோடியாக சரிவடைந்துள்ளது. இருப்பினும் இது நிபுணர்களின் கணிப்புகளை காட்டிலும் அதிகமாகும். ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2020 மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.217 கோடியும், ரூ.9,635 கோடி அளவுக்கே வருவாய் இருக்கும் என நிபுணர்கள் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த ஹிண்டால்கோ…. ஒரே காலாண்டில் ரூ.326 கோடி லாபம்….

தனது வெளிநாட்டு நிறுவனமான நோவேலிஸின் சிறப்பான செயல்பாடு, குறைந்த மூலதன செலவினம் மற்றும் இந்திய வர்த்தகத்தில் நிலையான செயல்பாடுகள் போன்றவற்றின் காரணமாக நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வலுவானதாக இருந்தது என ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.