அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது… அரசு நடத்தும் முஸ்லிம் பள்ளிகளை மூடும் அசாம் பா.ஜ.க. அரசு…

அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது… அரசு நடத்தும் முஸ்லிம் பள்ளிகளை மூடும் அசாம் பா.ஜ.க. அரசு…

அசாமில் அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது, அரசு நடத்தும் முஸ்லிம் பள்ளிகளை (மதரஸாக்கள்) மூட உள்ளதாக அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது ஆகையால் அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களையும் மூட உள்ளதாக பா.ஜ.க. அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:

அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது… அரசு நடத்தும் முஸ்லிம் பள்ளிகளை மூடும் அசாம் பா.ஜ.க. அரசு…
மதரஸா

அரசு நிதியுடன் மத கல்வி நிறுவனங்களை செயல்பட அனுமதிக்க முடியாது. மாநிலத்தில் அரசு பணத்தில் இயங்கும் அனைத்து மதரஸாக்களும் மூடப்படும். இது குறித்து நவம்பரில் ஒரு அறிவிப்பை வெளியிடுவோம். தனியாரால் நடத்தப்படும் மதரஸாக்கள் குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு அசாமில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசு அரசு பணத்தில் இயங்கும் மதரஸாக்களை மூட முடிவு எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பணத்தில் மத கல்வியை அனுமதிக்க முடியாது… அரசு நடத்தும் முஸ்லிம் பள்ளிகளை மூடும் அசாம் பா.ஜ.க. அரசு…
பத்ருதீன் அஜ்மல்

அசாம் அரசின் இந்த அறிவிப்புக்கு ஏ.ஐ.யூ.டி.எப். கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், உங்களால் மதரஸாக்களை மூட முடியாது. தற்போதைய அரசு அவற்றை வலுக்கட்டாயமாக மூடினால், நாங்கள் ஆட்சி வந்ததும், 50 முதல் 60 ஆண்டுகள் பழமையான மதரஸாக்களை மீண்டும் திறக்க ஒரு மாநில அமைச்சரவை முடிவு எடுப்போம் என தெரிவித்தார்.