லாக்டவுனுக்கான அறிகுறியா? குஜராத், ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்

லாக்டவுனுக்கான அறிகுறியா? குஜராத், ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்

குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேச அரசும் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைந்த வண்ணம் இருந்தது. மேலும் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதமும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் பல மாநிலங்களில் பழையபடி இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இந்த சூழ்நிலையில், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

லாக்டவுனுக்கான அறிகுறியா? குஜராத், ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்
இரவு ஊரடங்கு

இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்டவை தங்களது மாநிலங்களில் சில மாவட்டங்களில் இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது இமாச்சல பிரதேச அரசும் சிம்லா, கங்ரா, மாண்டி மற்றும் குல்லு ஆகிய 4 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. வரிசையாக மாநிலங்கள் இரவு ஊரடங்கை அமல்படுத்தி வருவது மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுனுக்கான அறிகுறியா? குஜராத், ம.பி., ராஜஸ்தானை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் இரவு ஊரடங்கு அமல்
மாஸ்க்

இமாச்சல பிரதேச அரசு மாஸ்க் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.1,000-ஆக உயர்த்தியுள்ளது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் எந்தவொரு கூட்டங்கள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்க வேண்டாம் என்றும் முடிவு செய்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் 26ம் தேதி தொடங்குகிறது.