கொரோனா வைரஸ் எதிரொலி…. இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…

கொரோனா வைரஸ் எதிரொலி…. இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இம்மாதம் 31ம் தேதி வரை லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு சற்று தளர்த்தியது. உள்நாட்டு விமான, ரயில், பஸ் போக்குவரத்துக்கு தொடங்கி விட்டது. இதனால் இந்த மாதத்தோடு லாக்டவுன் முடிவுக்கு வந்து விடும் என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் லாக்டவுன் முடிவுக்கு வருவது கடினம்தான் என்பது போல் தெரிகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலி…. இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இமாச்சல பிரதேச அரசு அம்மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவை அடுத்த மாதம் (ஜூன்) 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாகூர் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அங்கீகாரம் அளித்தது.

கொரோனா வைரஸ் எதிரொலி…. இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு…

இமாச்சல பிரதேச அமைச்சரவையின் முடிவை தொடர்ந்து, ஹமிர்புரில் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஹமிர்புர் துணை ஆணையர் மீனா அறிவித்தார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அந்த பகுதிகளில் 5 பேருக்கு மேல் கூட்டமாக நிற்க கூடாது. மீறினால் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 269 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.