நான் உள்பட மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொடி ஏற்றுவோம்.. பா.ஜ.க. முதல்வர் உறுதி

நான் உள்பட மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொடி ஏற்றுவோம்.. பா.ஜ.க. முதல்வர் உறுதி

காலிஸ்தானி ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தபோதிலும், நான் உள்பட மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று தேசிய கொடி ஏற்றுவோம் என்று இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று முதல்வரை கொடி ஏற்ற அனுமதிக்க மாட்டோம் என்று பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை செய்தி, அடையாளம் தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து பல பத்திரிகையாளர்கள் மற்றும் மற்றவர்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்தது. இதனை காலிஸ்தானி ஆதரவாளர்கள் அனுப்பி இருந்தனர். இது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நான் உள்பட மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொடி ஏற்றுவோம்.. பா.ஜ.க. முதல்வர் உறுதி
போன் அழைப்பு

இது தொடர்பாக முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: பிரிவினைவாத எண்ணம் கொண்ட மக்கள் இத்தகைய அச்சுறுத்தல்களால் மாநிலத்தின் அமைதியை கெடுக்க விரும்புகிறார்கள். இது பொறுத்துக் கொள்ளப்படாது. ஆகஸ்ட் 15ம் தேதியன்று நமது மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் மற்றும் முதல்வர் (தாக்கூர்) கொடியை ஏற்றி வைப்பர்.

நான் உள்பட மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொடி ஏற்றுவோம்.. பா.ஜ.க. முதல்வர் உறுதி
ஜெய் ராம் தாக்கூர்

மாநிலத்தின் பாதுகாப்பை பொறுத்தவரையில் இமாச்சல பிரதேச காவல்துறை இயக்குனர் (டி.ஜி.பி.) நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். மிரட்டல் போன் குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். செல்போன் அழைப்புகளை விசாரிக்க இணைய குற்ற நிபுணர்களை செயல்படுததுவதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.