darbar
  • January
    25
    Saturday

Main Area

Main



தாயின் குடிப்பழக்கம்... படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குழந்தைகளை பிச்சை எடுக்க வாய்த்த அவலம்!

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

பிச்சை எடுத்தாவது குழந்தைகளைப்  படிக்க வைக்கும்  தாய்மார்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தாயா என்ற கேள்வியை  கேட்கும் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். 

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் போதைக்கு அடிமையான தாய்  ஒருவர் தனது இரு குழந்தைகளையும் பிச்சை எடுக்க வைத்துள்ளார். எல்லா குழந்தைகள் போல நாமும் பள்ளிக்கு செல்லவேண்டும், புத்தக பையை சுமக்க வேண்டும் என்று  நினைத்த அந்த குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிச்சை எடுக்க வைத்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

ttn

தாயின் மதுப் பழக்கத்தைத்  தீர்த்து வைக்க, அந்த குழந்தைகளும் செய்வதறியாது கோயில் வாசலில் கையேந்தி வந்துள்ளனர். அவர்களை மீட்டு  அவர்களுக்கு அரசாங்கம் களவு உதவி செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில்   இந்த செய்தி சார் ஆட்சியர் சரவணன் காதுக்கு எட்டியுள்ளது.

ttn

இதை தொடர்ந்து  அந்த  இரு சிறுவர்களையும் மீட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய சார் ஆட்சியர் சரவணன் முன்வந்துள்ளார். எதிர்காலத்தில் அவர்கள் விரும்பவும் படிப்பை தந்து அவர்களை  நல்ல குடிகளாகக் கொண்டுவரவும் அரசு உதவவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. 


 

2018 TopTamilNews. All rights reserved.