முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தனது ஆட்சியின் போதே ஜெயலலிதா காலமானார். அவருக்கு பிறகு முதல்வராக பதவியேற்கவிருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பதவியேற்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஒரு மனதாக முதல்வர் பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் தமிழக முதல்வராக பதவியேற்றார். முதல்வர் பழனிசாமி தனது முதற்கடமையாக பார்த்தது ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதைத் தான்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

அதனால், கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். ரூ.80 கோடி செலவில் 50,442 சதுர அடி பரபரப்பளவில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டது. அதனை இன்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

இந்த நிகழ்வை காண, வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான அதிமுகவினர் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்தனர். மெரினா கடற்கரை சாலை முழுவதும் தற்போது அதிமுகவினர் கூட்டத்தால் நிரம்பியிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பம்சங்கள் என்ன?

சிறப்பம்சங்கள்:

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலத்தில் ஃபீனிக்ஸ் பறவை உருவ அமைப்பில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் நடைபாதை, புல்வெளி, கிரானைட் கற்களாலான தரை பகுதி நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் வளாகத்தில் ரூபாய் 12 கோடி மதிப்பில் டிஜிட்டல் முறையில் அருங்காட்சியகம் உருவாகிறது. நினைவிட வளாகத்தில் பணிகள் நடப்பதால் அறிவுத்திறன் பூங்காவும், அருங்காட்சியகமும் பின்னர் திறக்கப்பட உள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் எப்போதும் மக்களிடம் சொல்லும் ‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.