சிறுதானியங்களுக்கு அதிக விலை! நெல்லுக்கு மாற்றாக சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

 

சிறுதானியங்களுக்கு அதிக விலை! நெல்லுக்கு மாற்றாக சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

புதுவை மாநிலம் காரைக்காலில் முதல்முறையாக சோதனை அடிப்படையில் நெல் சாகுபடிக்கு மாற்றாக ராகி சாகுபடி செய்ததில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது அடுத்தாண்டு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தப்படும் தெரிவித்துள்ளனர்.

சிறுதானியங்களுக்கு அதிக விலை! நெல்லுக்கு மாற்றாக சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதியாக திகழ்வது புதுவை மாநிலம் காரைக்கால் . இம்மாவட்டத்தில் வழக்கமாக நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் ஆழ்குழாய் அமைத்து 2 போக சாகுபடியும் மற்ற இடங்களில் ஒரு போக நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் காவேரி நீர் என்பது மிகப்பெரிய சவாலாக திகழ்ந்து வரும் நிலையில் நெல்லுக்கு மாற்றாக முதல்முறையாக வறண்ட பகுதியில் குறைந்த நீரை கொண்டு சாகுபடி செய்யப்படும் சிறுதானிய வகையான கேழ்வரகு சாகுபடி சோதனை அடிப்படையில் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் பேட்டை நிரவி திருநள்ளாறு கோட்டுச்சேரி உள்ளிட்ட 21 இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்றது .

சிறுதானியங்களுக்கு அதிக விலை! நெல்லுக்கு மாற்றாக சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

கீரை சாகுபடிக்கு தேவையான விதைகள், இடுபொருள்கள் வேளாண் உபகரணங்கள் அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவை ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள ராகி இன்னும் ஒருசில தினங்களில் அறுவடை செய்யும் அளவிற்கு தழைத்து வளர்ந்துள்ளது .

பஞ்சகாவியம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி ராகி சாகுபடி ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் பல ஆண்டுகளாக நெல் உளுந்து பயிர் சாகுபடி செய்து வந்த தங்களுக்கு முதல்முறையாக ராகி சாகுபடி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த விவசாயிகள், குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீர் குறைவான நேரத்திலும் சாகுபடி செய்வதோடு ராகி செடி கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவதாகும் தெரிவித்த விவசாயிகள், ராகி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததால் அடுத்த ஆண்டு தங்கள் வயல்களில் கூடுதலாக ராகி சாகுபடி செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

சிறுதானியங்களுக்கு அதிக விலை! நெல்லுக்கு மாற்றாக சிறு தானிய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்!

வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கையில் சோதனை அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் தொடங்கியுள்ள இந்த ராகி சாகுபடி அடுத்த ஆண்டு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் என இதற்கான அனைத்து உதவிகளும் வேளாண் துறை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர் தற்போது சிறுதானியங்களுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக சிறு தானிய சாகுபடியில் ஈடுபட வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.