நில மோசடி வழக்கு! சூரிக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி, விஷ்ணு விஷால் தந்தைக்கு ஆப்பு!!

 

நில மோசடி வழக்கு! சூரிக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி, விஷ்ணு விஷால் தந்தைக்கு ஆப்பு!!

ரூ.2.70 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் சூரிக்கு தரவேண்டிய 40 லட்சம் சம்பள பாக்கிக்கு பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.

நில மோசடி வழக்கு! சூரிக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி, விஷ்ணு விஷால் தந்தைக்கு ஆப்பு!!

இதற்கு மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால், “என் மீதும் என் தந்தை மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ‘கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017ஆம் ஆண்டு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை சூரி தான் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு திரும்பத் தர வேண்டும்” என்றார். இதனிடையே ரமேஷ் குடவாலா செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர் மீதான ரூ.2.70 கோடி மதிப்பிலான நிலமோசடி புகாரை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தாம் கைது செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாதென நடிகர் சூரி கோரிக்கை விடுத்தார். இதனை கேட்ட நீதிபதி, சூரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்து வழக்கை நவம்பர் 5 ஆம் தேதி ஒத்திவைத்தார்.