ரூ. 399க்கு அதிகவேக இன்டர்நெட்ஜியோ ஃபைபர் அறிமுகம்

 

ரூ. 399க்கு அதிகவேக இன்டர்நெட்ஜியோ ஃபைபர் அறிமுகம்

அதிவேக இன்டர்நெட் சேவை அளித்து வரும் ஜியோ ஃபைபர் நிறுவனம், 399 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் அளவற்ற பிராட்பேண்ட் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ. 399க்கு அதிகவேக இன்டர்நெட்ஜியோ ஃபைபர் அறிமுகம்

30 எம்பிபிஎஸ் வேகம்
30 எம்பிபிஎஸ் வேத்துடன் அளவற்ற டேட்டா வசதியுடன் 399 ரூபாய் திட்டம் அறிமுப்படுத்தப்பட்டு உள்ளதாக ஜியோ ஃபைபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக வீட்டில் பலரும் பணிபுரிவதால் இணையபயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் ஏற்ற வகையில் குறைந்த மாதாந்திர கட்டணத்தில் இன்டர்நெட் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ. 399க்கு அதிகவேக இன்டர்நெட்ஜியோ ஃபைபர் அறிமுகம்

அமேசான் பிரைம் உள்பட 11 ஒடிடி சந்தா இலவசம்
முன்னதாக 699 ரூபாய்என்ற கட்டணத்தில் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது அந்த கட்டண திட்டத்துக்கான வேகம் 100 எம்பிபிஎஸ் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்தில் அளவற்ற டேட்டா அளிக்கப்படுவதாகவும் ஜியோ தெரிவித்துள்ளது. இதைத்தவிர 999 ரூபாய்என்ற கட்டணத்தில் பிராட்பேண்ட் சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, 150 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவற்ற இன்டர்நெட் வழங்குவதோடு, அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட 11 வகையான ஒடிடி தளங்களுக்கு மாதாந்திர சந்தா இலவசம் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது.

ரூ. 399க்கு அதிகவேக இன்டர்நெட்ஜியோ ஃபைபர் அறிமுகம்

30 நாட்கள் ஃப்ரீ டிரையல்
இதைத்தவிர, 1499 ரூபாய் கட்டண திட்டத்திற்கு 300 எம்பிபிஎஸ் வேகத்துடன் அளவற்ற டேட்டா மற்றும் 12 ஒடிடி தளத்தின் சந்தா இலவசம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து கட்டண திட்டங்களுக்கும் அளவற்ற அழைப்பு பயன்களும், அப்லோடு மற்றும் டவுன்லோடு இரண்டுக்கும் ஒரே மாதிரியான வேகம் கொண்டதாக சேவை இருக்கும் என்றும் ஜியோ தெரிவித்துள்ளது. மேலும், புதிய வாடிக்கையாளர்கள், 30 நாட்களுக்கு இலவசமாக ஃபைபர் சேவையை டிரையல் செய்து பார்க்கவும் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது ஜியோ என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 399க்கு அதிகவேக இன்டர்நெட்ஜியோ ஃபைபர் அறிமுகம்


-முத்துக்குமார்