‘ஆளுங்கட்சி’ன்னா சும்மா இருப்பீங்களோ? ..விளாசிய நீதிமன்றம்!

 

‘ஆளுங்கட்சி’ன்னா சும்மா இருப்பீங்களோ? ..விளாசிய நீதிமன்றம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. களத்தில் இறங்கியிருக்கும் வேட்பாளர்கள் பொதுமக்களுடன் சகஜமாக பேசுவது, டீ குடிப்பது, நடனமாடுவது போன்ற வழக்கமான அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, வாக்களர்களின் வீடுகளுக்குள்ளே சென்றும் போன் செய்தும் வாக்கு சேகரிக்கிறார்கள்.

‘ஆளுங்கட்சி’ன்னா சும்மா இருப்பீங்களோ? ..விளாசிய நீதிமன்றம்!

அந்த வகையில், புதுச்சேரியில் பாஜகவினர் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு டயல் செய்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, புகாருக்கு உள்ளாகும் கட்சியின் மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் அமைதி காக்குமா? வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெற்றது எப்படி? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், மார்ச் 26ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.