அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு!

 

அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் இப்போதைய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூல நகல்களை செந்தில்பாலாஜி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிப்பதற்காக அனைவரும் ஆஜராக வேண்டும் என ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு!

இந்நிலையில், நீதிபதி அலிசியா முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்கள் இருவரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.