காரைக்காலில் 200 பேர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு ;ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு

காரைக்காலில் 200 பேர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு ;ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு

காரைக்காலில் பல மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்ற மீனவரை மூத்தோர்களுக்கு பரிவட்டம் கட்டும் நடைமுறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் ராஜேந்திரனுக்காக வனத்தாய் குடும்பத்தினர் 200 நியாயம் கேட்டுள்ளனர். ராஜேந்திரனுக்கு பரிந்துரைத்து பேசியதால் அந்த 200 பேரை ஊரை விட்டு ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

காரைக்காலில் 200 பேர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு ;ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்தாய் குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து காரைக்கால் துணை ஆட்சியர் 20 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.