ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

 

ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனக் குரலை எழுப்பிய ஆதி தமிழர் மக்கள் கட்சியினர், ஆர்.எஸ்.பாரதி மீது புகாரளித்தனர். அந்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனக்கு எதிரான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அண்மையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

இந்த நிலையில், ஆர்.எஸ்.பாரதி மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கில் தினமும் விசாரணை நடத்தி தாமதமின்றி வழக்கை முடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.