“குற்றவாளியை சகோதரனாக்கிய கோர்ட்”- பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொண்டார்..

“குற்றவாளியை சகோதரனாக்கிய கோர்ட்”- பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொண்டார்..

ஏப்ரல் 20 ஆம் தேதி, மத்தியப்பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைனில் உள்ள 30 வயதான பெண்ணின் வீட்டிற்குள் வன்கொடுமை செய்ய நுழைந்ததாக பக்ரி மீது குற்றம் சாட்டப்பட்டு,அவரின் வழக்கு நடைபெற்று வருகிறது ,இப்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் .

“குற்றவாளியை சகோதரனாக்கிய கோர்ட்”- பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொண்டார்..
இந்நிலையில் அந்த மாநிலத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகை அங்கு மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .ரக்ஷா பந்தனில் பெண்கள் ஆண்களுக்கு ராக்கி கட்டி தங்களை சகோதரனாக்கி கொல்வார்கள் .அப்போது அவர் ராக்கி கட்டிய ஆண் அவருக்கு நிறைய வெகுமதிகள் கொடுப்பது வழக்கம் .
அதனால் மத்தியபிரதேச கோர்ட் பக்ரி என்ற அந்த குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கும்போது ,அவர் பாலியல் வன்கொடுமை செய்ய போன அந்த பெண்ணின் கையால் ராக்கி கட்டிக்கொள்ளவேண்டுமெனவும் ,அந்த பெண்ணுக்கு 11000 ரூபாய் மதிப்புள்ள வெகுமதியை கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது .

“குற்றவாளியை சகோதரனாக்கிய கோர்ட்”- பாலியல் வன்கொடுமை செய்த பெண்ணிடம் ராக்கி கட்டிக்கொண்டார்..
இதனால் பக்ரி திங்கள் கிழமை ஊர்வலமாக இசை முழக்கத்தோடு தன்னுடைய மனைவியோடு ,தான் தவறாக நடக்க முயன்ற பெண்ணின் வீட்டுக்கு சென்றார் ,அப்போது அந்த பெண் அவரின் கையில் ராக்கி கட்டி சகோதரனாக்கினார் ,உடனே பக்ரி அவரின் குழந்தைக்கு 5000 ரூபாய் மதிப்பில் கிப்ட் வாங்கி கொடுத்தார் .அந்த பெண்ணுக்கும் நிறைய கிப்ட் கொடுத்து தன்னுடைய சகோதரியாக்கி கொண்டார் .இந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழ செய்தது .