நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை: ஆனால் இனி கவனமுடன் பேசுங்கள்!

 

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை:  ஆனால் இனி கவனமுடன் பேசுங்கள்!

பொது விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும் போது கவனம் தேவை என நடிகர் சூர்யாவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

நீட் தொடர்பான தனது எதிர்ப்பை கடுமையான விமர்சனங்களுடன் பதிவு செய்த நடிகர் சூர்யா, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் மாணவர்களை அச்சமின்றி தேர்வு எழுத அறிவுறுத்துகிறது என்று  கூறியிருந்தார்.

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை:  ஆனால் இனி கவனமுடன் பேசுங்கள்!

நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சூர்யாவின் கருத்து மாண்பைக் குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே சூர்யா மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். ஆனால் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகளான சந்துரு, பாஷா, சுதந்திரம், கண்ணன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி ஆகியோர்  தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதினர்.

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில்லை:  ஆனால் இனி கவனமுடன் பேசுங்கள்!

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு  , நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தது.  அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசித்த பின் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி,   நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு இவ்வாறு தெரிவித்தது. சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேரும் கடிதம் எழுதிய நிலையில் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள்  பொது விவகாரம் குறித்து பேசும் போது கவனம் தேவை. நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்க கூடாது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர, எல்லை மீற கூடாது என அறிவுறுத்தி, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கோரிக்கையை நிராகரித்தனர்.