‘மிகப்பெரிய பட்ஜெட்’ திரைப்படங்களின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

 

‘மிகப்பெரிய பட்ஜெட்’ திரைப்படங்களின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. நாளொன்றுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய தமிழக அரசு பூங்காக்கள், மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களை மூடுமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஷூட்டிங்களுக்கு தடை விதிக்கவில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டன.

‘மிகப்பெரிய பட்ஜெட்’ திரைப்படங்களின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

கடந்த ஆண்டு ஷூட்டிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் திரைத்துறை தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்படவில்லையென கூறப்பட்டது. இருப்பினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படப்பிடிப்புகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

‘மிகப்பெரிய பட்ஜெட்’ திரைப்படங்களின் ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

இதன் காரணமாக, மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் நடிகர்கள் சூர்யா, விக்ரம் மற்றும் சிவ கார்த்திகேயன் ஆகியோரது படங்களின் ஷூட்டிங் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 60ஆவது திரைப்படத்தின் ஷூட்டிங்கும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் டான் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் சூர்யா 40 திரைப்படத்தின் ஷூட்டிங்கும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பிறகே ஷூட்டிங் மீண்டும் தொடங்குமென தெரிகிறது.