’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

ஐபிஎல் போட்டிக்கு சரியாக ஒரு வாரமே இருக்கிறது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட  இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கவிருக்கிறது.

இதற்காக அனைத்து அணிகளுமே தீவிர பயிற்சியில் இருக்கின்றன. சோதனை மேல் சோதனை வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இப்போது ஒருவித சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. ஆம். கொரோனா பாதிக்கப்பட்ட பந்துவீச்சாளர் தீபக் சாஹர் நோயிலிருந்து மீண்டு பயிற்சிக்குத் திரும்பிவிட்டார்.

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெல்லும் என ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ உள்ளிட்ட பலருமே கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான இரு வீரர்கள் இல்லை. ஒருவர் சுரேஷ் ரெய்னா. மற்றொருவர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன். ஐபிஎல் பெரும்பாலான ஆட்டங்கள் பேட்ஸ்மேன்களைச் சார்ந்திருப்பதால் சுரேஷ் ரெய்னாவில் இழப்பு பெரிய பின்னடைவை தரும் என்றே சொல்லலாம்.

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே (2008-2015, 2018-2019) சுரேஷ் ரெய்னா 164 மேட்ச்களில் ஆடி, 4527 ரன்களைக் குவித்திருக்கிறார். 412 ஃபோர்களையும் 171 சிக்ஸர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசியிருக்கிறார். இன்றைய தேதி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர் சுரேஷ் ரெய்னாவே.

சுரேஷ் ரெய்னா மூன்றாம் இடத்தில் இறங்குவார். இந்த ஆர்டரில் இறங்கும் பேட்ஸ்மேன் போட்டியின் போக்கை உணர்ந்து அதிவேக ரன்குவிப்பா… விக்கெட்டை தக்க வைத்தலா… சீரான ரன் சேகரிப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதை மிக பொறுப்போடு செய்தவர் ரெய்னா.

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

இப்போது அவர் இல்லையெனும்போது அந்த இடத்தில் யாரை இறக்குவது என்பது பெரும் சிக்கலாக சிஎஸ்கேவுக்கு மாறியுள்ளது.

மூன்றாம் இடத்தில் தேனியே இறங்க வேண்டும் என்கிறார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் சொல்வது முரளி விஜயை.

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் சொல்வது பந்துவீச்சாளர் சாம்குரானை. தன் இடத்தில் யார் விளையாடினால் சரியாக இருக்கும் என சுரேஷ் ரெய்னா சொல்லியிருக்கிறார் தெரியுமா… கேப்டன் தோனியைத்தான்.

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பரிந்துரை செய்துவரும் நிலையில் நியுஸிலாந்து ஸ்காட் ஸ்டைரிஸ் சொல்வது யாரைத் தெரியுமா?

’ரெய்னா இடத்தில் ஆட இவரே பொருத்தமானவர்’ இன்னுமா முடியல அந்த பஞ்சாயத்து

அதிரடி பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. இதுவரை 147 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3,300 ரன்களைக் குவித்துள்ளர். அதில் 1 சதமும் 18 ஐம்பதுகளும் அடங்கும்.