பண்டிகை காலத்தில் விற்பனையில் தூள் கிளப்பிய ஹீரோ.. 32 நாளில் 14 லட்சம் இரு சக்கர வாகனங்கள் காலி

பண்டிகை காலத்தில் விற்பனையில் தூள் கிளப்பிய ஹீரோ.. 32 நாளில் 14 லட்சம் இரு சக்கர வாகனங்கள் காலி

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பண்டிகை காலத்தில் மொத்தம் 14 லட்சம் இரு சக்கர வாகனங்களை ரீடெய்ல் விற்பனை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் நம் நாட்டில் வாகன விற்பனை நிலவரம் கவலைக்கிடமாக இருந்தது. லாக்டவுன் விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த ஜூன் முதல் வாகன விற்பனை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது. இருப்பினும் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது வாகன விற்பனை சுமாருதான்.

பண்டிகை காலத்தில் விற்பனையில் தூள் கிளப்பிய ஹீரோ.. 32 நாளில் 14 லட்சம் இரு சக்கர வாகனங்கள் காலி
ஹீரோ மோட்டார்சைக்கிள்கள்

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பண்டிகை காலத்தில் விற்பனை நன்றாக இருக்கும் என்று பெரிதும் நம்பின. மற்ற நிறுவனங்களுக்கு எப்படியோ, நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு நல்ல சேமமாக இருந்தது. பண்டிகை காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மொத்தம் 14 லட்சம் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள்களை ரீடெய்ல் விற்பனை செய்துள்ளது.

பண்டிகை காலத்தில் விற்பனையில் தூள் கிளப்பிய ஹீரோ.. 32 நாளில் 14 லட்சம் இரு சக்கர வாகனங்கள் காலி
ஹீரோ ஸ்கூட்டர்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இது குறித்து கூறுகையில், கோவிட்-19 காரணமாக இந்த ஆண்டு கடுமையான இடையூறுகள் இருந்தாலும், நவராத்திரி முதல் நாள் முதல் பாய் துஜ் வரையிலான பண்டிகை காலமான கடந்த 32 நாட்களில் விற்பனை நன்றாக இருந்தது. 2019ம் ஆண்டில் நடந்த பண்டிகை விற்பனையுடன் ஒப்பிட்டால் தற்போது ரீடெய்ல் விற்பனை 98 சதவீதத்தை எட்டி விட்டது. அதேசமயம் 2018ம் ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிட்டால் ரீடெய்ல் விற்பனை 103 சதவீதம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.